சமூகக்கல்வி பாடத் திட்டத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் : சாணக்கியன் குற்றச்சாட்டு
சமூகக்கல்வி பாட புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்பதே தமது கோரிக்கை என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் அரசியல் நிலவரம்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலே ஏதோவொரு நம்பிக்கையின் அடிப்படையில் மறைந்த எமது தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் அடுத்த பொங்கலுக்கிடையில் தீர்வு கிடைக்கும், அடுத்த தீபாவளிக்கிடையில் தீர்வு கிடைக்கும் என்றெல்லாம் சொல்லக்கூடிய விதத்திலே தமிழர்களின் அரசியல் நிலவரம் இருந்தது.

பலர் அது தொடர்பில் பல விமர்சனங்களை முன்வைத்தார்கள், பகிடியாக பேசினார்கள். இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய விடயம் என்னவெனில் எமது தலைவர் சம்பந்தன் நிரந்தரமான கௌரவமானதொரு அரசியல் தீர்வு தமிழர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அந்தக் காலத்தில் அரசியலில் ஈடுபட்டார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு நாடாளுமன்றம் ஒரு அரசியற்பேரவையாக மாற்றப்பட்டு அரசியல் அமைப்பினுடைய ஒரு வரைவு வேலை ஆரம்பிக்கப்பட்டு இடைக்கால வரைவொன்று உருவாகி அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இப்படியாக பல முன்னேற்றங்கள் நடந்தன.
அரசியல்கைதிகள் விடுவிக்கப்பட்டனர், எமது காணிகள் விடுவிக்கப்பட்டன, காணாமல் ஆக்கப்பட்டோர் பொறுப்புக் கூறல் விடயத்தில் நாங்கள் முழுமையாக இணங்காவிட்டாலும் அரசாங்கம் ஏதாவது செயற்பாடுகளை முன்னெடுத்தது.
அந்த அடிப்படையில் 2016,2017,2018 ஆம் ஆண்டுகளில் சம்பந்தன் தீபாவளிக்கு தீர்வு வரும், பொங்கலுக்குத் தீர்வு வரும் எனக்கூறியது தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கை தரக்கூடிய வகையில் செயற்பாடுகள் இருந்தது.
கல்வி மறுசீரமைப்பு என்பது முக்கியமானது
ஆனால் துரதிஷ்டவசமாக இன்று 2026ஆம் ஆண்டு தை பிறக்கும் பொழுது தமிழ் மக்களுடைய நிரந்தரமான அரசியல் தீர்வைப்பற்றி நம்பிக்கையுடன் இருக்கக்கூடிய வகையில் அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் இல்லை என்பதை மனவருத்தத்துடன் கூறவேண்டியுள்ளது.

இன்னும் ஆறேழு மாதங்களில் ஜனாதிபதி அவர்கள் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிவிடும்.
அதற்கிடையில் அரசியற்கைதிகள் எவரும் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஜனாதிபதியுடனான உரையாடல்களிலிருந்தும் பாதுகாப்புத் தரப்பினருடனான உரையாடல்களிலிருந்தும் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.
காணிவிடுவிப்பு தொடர்பில் நாங்கள் பேசியபோதும் எந்த இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. இன்றுவரை சில பாதைகள் மாத்திரம் திறக்கப்பட்டு அவற்றைக்கூட 7.00மணிக்குப்பிறகு பயன்படுத்த முடியாத நிலை மயிலிட்டி போன்ற பிரதேசங்களில் உள்ளது.
தமிழர்களின் வரலாற்றினை பாடப்புத்தகத்தில் உள்ளடக்க வேண்டும் என்ற வகையிலான அழுத்தங்களை வழங்குவதற்காவது இதனை ஒரு நிபந்தனையாக முன்வைக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
கல்வி மறுசீரமைப்பு என்பது முக்கியமானதும் அவசியமானதுமான விடயம். ஆனால் இதனை எவ்வாறு செய்யவேண்டும் என்பது தொடர்பில் தமிழர்கள் தரப்பிலிருந்தும் கருத்துகளை உள்வாங்கி மேற்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
படத்திற்கு நல்ல வரவேற்பு.. ஆனால், நெட்டிசன்களிடம் திட்டு வாங்கும் நடிகர் ஜீவா.. காரணம் என்ன Cineulagam