யாழ்.போதனா வைத்தியசாலையின் வரலாற்று சாதனை
யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் இன்று (30.01.2023) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்கு அவருடைய தாயார் தானமாக வழங்குவதற்கு முன் வந்திருந்த நிலையில் அதற்குரிய சத்திர சிகிச்சை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களின் பங்கேற்போடுகடந்த 18ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தில் நான்கு மணித்தியாலமாக இடம்பெற்ற சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் மிகவும் வெற்றிகரமான முறையில் தாயாரின் சிறுநீரகம் 17 வயதுடைய பெண் பிள்ளைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிறுநீரக மாத்து சத்திர சிகிச்சை
வரலாற்றில் முதல் முதலாக இந்த சிறுநீரக மாத்து சத்திர சிகிச்சை யாழ்ப்பாண வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை ஒரு வரலாற்று சாதனை.
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை யாழ். போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக
நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் பொதுமக்கள் யாராவது சிறுநீரகம்
செயலிழந்த தங்களுடைய உறவினர்கள் யாருக்காவது சிறுநீரகத்தினை தானமாக வழங்க முன்
வந்தால் அதற்குரிய உடற் பரிசோதனைகள் மருத்துவ பரிசோதனைகள்
முன்னெடுக்கப்பட்டு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையினை யாழ்ப்பாண போதனா
வைத்தியசாலையில் முன்னெடுக்க முடியும் என தெரிவித்தார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
