சிரியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணை: ஆசாத் காலத்து அதிகாரிகள் மீது பகிரங்க வழக்கு
சிரியாவில் சுமார் 14 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து, ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில், அவரது ஆட்சிக் காலத்தில் பணியாற்றிய உயர்மட்ட அதிகாரிகள் மீதான முதல் பகிரங்க விசாரணை (Public Trial) தலைநகர் டமாஸ்கஸில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சிரிய வரலாற்றில் ஆசாத் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் நெருங்கிய வட்டாரத்தினர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
தெற்கு சிரியாவின் டெரா (Deraa) மாகாணத்தின் முன்னாள் அரசியல் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் ஆதிஃப் நஜிப் (Atef Najib) ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார்.
வழக்குத் தாக்கல்
2011ஆம் ஆண்டு மக்கள் கிளர்ச்சியின் போது போராட்டக்காரர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் முன்னாள் ஜனாதிபதி ஆசாத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத் மற்றும் அவரது சகோதரர் மாஹெர் ஆசாத் ஆகியோர் மீதும் அவர்கள் இல்லாத நிலையில் (In absentia) வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவர்கள் மீது கொலை, சித்திரவதை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
2011-இல் பாடசாலை சுவர்களில் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்களை எழுதிய சிறுவர்களைக் கைதுசெய்து சித்திரவதை செய்ததன் மூலம் உள்நாட்டுப் போர் வெடிக்கக் காரணமாக இருந்தவர் நஜிப் என்று சிரிய அரசு ஊடகமான 'சானா' (SANA) தெரிவித்துள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 8 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri