வரலாற்று சிறப்பு மிக்க ஜேர்மன் ஹாம் அம்மன் ஆலய தீர்த்தம்
வரலாற்று சிறப்பு மிக்க ஜேர்மன் ஹாம் அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் இன்றைய தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்களைக் கொண்டு இந்த உற்சவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கோவிட் தாக்கம் காரணமாக மிகவும் பாதுகாப்புடன் சொற்ப அளவிலானவர்களைக் கொண்டு திருவிழா நடத்தப்பட்டுள்ளது.
வழமையாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்து திருவிழாவிற்காக மக்கள் வருகைத் தருகின்ற போதிலும் தற்போதிருக்கும் இக்கட்டான சூழ்நிலையால் வெளிநாடுகளிலுள்ள பக்தர்களும் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் ஆலயத்தின் தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam