பிரான்சில் தீக்கிரையான வரலாற்று சிறப்புமிக்க தேவாலயம்
பிரான்சின் செயிண்ட்-ஓமர் (Saint-Omer) பகுதியில் அமைந்துள்ள இமான்குலேட் கான்செப்ஷன் (Immaculate Conception Church) என்ற வரலாற்று சிறப்புமிக்க தேவாலயம் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது இன்று (02) அதிகாலை 4:30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
90 தீயணைப்பு வீரர்கள்
இதன்போது தேவாலயத்தின் மணிக்கூண்டு இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்திற்கான காரணம் முதற்கட்ட தகவல்களில் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் பெரும் தீப்பிழம்புகள் மற்றும் புகை வானத்தில் உயர்ந்து செல்லும் காட்சிகள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகிறது.
இதனையடுத்து 90 தீயணைப்பு வீரர்கள் தேவாலயத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த களத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் காலை 7:15 மணியளவில் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டாலும், அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
