வெளியான சாதாரண தர பெறுபேறுகள் : வரலாற்று சாதனை படைத்த மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலை
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (01.12.2023) வெளியிடப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தின் வின்சன் மகளிர் தேசிய பாடசாலையில் 56 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்
உயர்தரம் கற்க தகுதி
பாடசாலை வரலாற்றில் இது ஒரு சாதனை என்பதோடு இப்பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 99 வீதமான மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றிய 176 மாணவர்களில் 56 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும் 19 மாணவர்கள் 8 பாடங்களில் ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.
17 மாணவர்கள் 7 பாடங்களில் ஏ சித்திகளையும், 2 பி சித்திகளையும் பெற்று உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்கள் வெள்ளிக்கிழமை பாடசாலைக்குச் சமூகம் தந்து பாடசாலை சமூகத்திடமிருந்து தமது வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்றுக் கொண்டனர்.
பாடசாலை அதிபர் தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 17 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
