பிணை அல்லது விடுதலை- முக்கிய சட்டத்தரணியின் மனு விசாரணைக்கு வருகிறது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விடுதலை அல்லது பிணையைக் கோரிய மீளாய்வு மனுவின் விசாரணை ஜனவரி 20ம் திகதி இடம்பெறவுள்ளது.
தமக்கு பிணை வழங்க மறுத்த புத்தளம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடுமாறு ஹிஸ்புல்லா தமது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவல ஆகிய இரு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு இந்த மீளாய்வு மனுவை ஜனவரி 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டு ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது சுமத்தப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையின் படி, ஹிஸ்புல்லா இந்த சட்டங்களுக்கு முரணாக மாணவர்களிடம் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. \
அவர் 2020 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். அன்று முதல் 18 மாத காலமாக காவலில் வைக்கப்பட்டுள்ளார்

