மின்சார வேலியில் சிக்கிய தாய் உயிரிழப்பு: குருநாகலில் சம்பவம்
குருநாகல், நாகொல்லாகம பிரதேசத்தில் காட்டு பன்றியை வேட்டையாடுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(31.08.2023) குருநாகல், நாகொல்லாகம - திம்பிரிவெவ பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த தாயாரின் மகளும், மகனும் மின்சாரம் தாக்கிப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
மேலதிக விசாரணை
வீட்டில் வளர்த்த பூனையைக் காணவில்லை என தாய், மகள், மகன் ஆகியோர் பூனையைத் தேடிச் சென்றபோது மின்சாரம் தாக்கியுள்ளது.

சம்பவத்தில் நாகல்லாகம பகுதியில் வசித்து வந்த 58 வயதுடைய ஆர்.எம்.பிசோ மெனிகே என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்தினார் எனக் கூறப்படும் 56 வயதுடைய விவசாயி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலதிக விசாரணை குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |