மக்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குவதே எனது நோக்கம்: சர்மிளா ராஜபக்ச
நவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கி தேசிய மிருகக்காட்சிசாலைகள் மூலம் மக்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குவதே தனது நோக்கம் என தேசிய விலங்கியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
"தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை இடமாற்றும் யோசனை எனக்கு இருந்தது, ஆனால் அது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இது ஒரு பெரிய திட்டம். மிகவும் கவனமாக செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அண்மையில் தேசிய விலங்கியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சர்மிளா ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.
சர்மிளா ராஜபக்ச, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதி முகாமைத்துவத்தில் இளங்கலைப் பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
சர்மிளா ராஜபக்ச இதற்கு முன்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் சமூக ஊடகப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri