பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு குறித்து ஹிருணிக்கா வெளியிட்ட தகவல்
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கெஹெல்பத்தர பத்மேவுடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அழைக்கப்பட்ட அவரிடம், 10 முதல் 15 நிமிடங்கள் வாக்குமூலம் பெறப்பட்டது. இது குறித்து ஹிருணிகா பிரேமச்சந்திர அறிக்கை ஒன்றை வெளியிட்டு தகவல் வெளியிட்டுள்ளார்.
கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புடையவர் என அடையாளப்படுத்தப்பட்ட பத்மசிறி என்ற நபருடன், 2024 ஆம் ஆண்டில் ஹிருணிகா தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இதன் போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தேர்தல் பணி
இதன்போது குறித்த நபருடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் வட்ஸ்அப் அழைப்பு மூலம் தன்னைத் தொடர்பு கொண்டு, தேர்தல் பணிகளுக்கு உதவி செய்ய முன்வந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.
ஒரு மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் தினமும் பல அழைப்புகள் வருவதாகவும், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் ஒரு அழைப்பு குறித்து எந்த ஆதாரமும் இன்றி தன்னிடம் கேள்வி எழுப்புவது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டார்
நற்பெயருக்கு களங்கம்
மேலும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரமுகருடன் தான் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் சுமார் 3 மணிநேரம் விசாரிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என ஹிருணிகா சுட்டிக்காட்டினார்.
தனது வாக்குமூலம் 15 நிமிடங்களுக்குள்ளேயே பதிவு செய்யப்பட்டதாகக் அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய செய்திகள் தனது தனது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ Cineulagam