கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹிருணிக்காவின் நிலை
மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) சிறைச்சாலை வைத்தியரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவ அறிக்கை பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் வெலிக்கடை மகளிர் சிறைச்சாலையின் ஆர் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹிருணிகா பிரேமச்சந்திரவும் ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படும் ஆடையுடன் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடூழிய சிறைத்தண்டனை
தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஹிருணிகா 18 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதோடு, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 20,000 ரூபா அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேன்முறையீடு
அபராத தொகையைச் செலுத்தத் தவறினால் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் மேலதிகமாக 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹிருணிக்காவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
