தகாத தொழிலுக்கு பெண்களை விற்பனை செய்யும் இணையத்தளதில் இணைக்கப்பட்ட ஹிருணிக்கா
சிறுவர்களை பாலியல் நடவடிக்கைக்காக ஈடுபடுத்தும் இணையத்தளத்தில் தனது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடவியலாளர் ஒருவர் ஹிருணிக்காவிடம் கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பெண் பிள்ளைகளின் Facebook மற்றும் Instagram தொடர்பில் எந்த ஒழுங்குமுறையும் இல்லை. பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலி விளபம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. அவ்வாறு பயன்படுத்தி விளம்பரம் செய்யும் இணையத்தளத்தில் என்னுடைய தொலைபேசி இலக்கங்களும் உள்ளன. எனது தொலைபேசிக்கு அழைத்த ஆண் ஒருவர் என்னை சந்திக்க வேண்டும் என கூறிார். அதன் பின்னர் ஆராய்ந்து பார்த்து அவரை எச்சரித்தேன்.
இலங்கையில் பலர் பாலியல் ரீதியான அழுத்தங்களில் உள்ளனர். கொரோனா தொற்றினால் வீட்டிலேயே இருப்பதனால் இந்த நிலைமை அதிகரித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பலர் கதைப்பதற்கு பயம். இவை தொடர்பில் பேச வேண்டும். பாலியல் கல்வி தொடர்பில் கூறியவுடன் கூச்சலிடும் மக்கள் பேருந்துகளில் பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுகின்றார் என கூறினால் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றார்கள். இது தொடர்பில் சமூக வலைத்தளங்களும் பொறுப்புக்கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
