நீதிமன்றில் முன்னிலையானார் ஹிருனிகா
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர சற்று முன்னர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் முன்னிலையாக தவறிய காரணத்திற்காக ஹிருனிகாவிற்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி அமல் ரனராஜா இந்த பிடிவிராந்து உத்தரவினை இன்று காலை பிறப்பித்திருந்தார்.
எவ்வாறெனினும், பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சில நிமிடங்களில் ஹிருனிகா பிரேமசந்திர தமது சட்டத்தரணியுடன் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.