அட்சயதிருதி தானம் செய்யும் நாளே அன்றி தங்கம் வாங்கும் நாளல்ல - சிவஸ்ரீ. ஜெ.மயூரக்குருக்கள்

By Mayuri May 12, 2021 04:01 PM GMT
Report

வவுனியா அட்சயதிருதி தானம் செய்யும் நாளே அன்றி தங்கம் வாங்கும் நாளல்ல என சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ. ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.

இன்று (12) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தானம் செய்யும் நாளே அன்றி தங்கம் வாங்கும் நாளல்ல. அட்சய திருதியை தங்கம் வாங்கவேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில்,

அட்சய திருதியை நாளில், தானங்கள் செய்யவேண்டும். இதைத்தான் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. வரும் 14.05.2021 வெள்ளிக்கிழமை அன்று அட்சய திருதியை வருகின்றது.

மகத்துவம் வாய்ந்த இந்த திருநாளன்று எந்த செயலைத் துவங்கினாலும் அது முழுமையாக வெற்றி பெறும் என்பது ஐதீகம். அட்சயம் என்றால் பூரணமானது நிறைவு மிகுந்தது என்று அர்த்தம். குறையவே குறையாதது என்று பொருள். அதாவது,

அழியாத பலன் தரக்கூடியது என்பார்கள். வளருதல் என்றும் அர்த்தம் உண்டு. இந்தத் திருநாளில் துவங்கும் நற்காரியங்கள் பலமடங்கு பலனைப் பெற்றுத் தரும் என்று கூறப்படுகிறது.

பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளால் குசேலன் குபேரயோகம் பெற்றதும் இந்த நாளில்தான். ஆதிசங்கரர் திருமகளைத் துதித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடி செல்வ மழையைப் பொழியச் செய்ததும் இந்த நன்னாளில்தான் கிருத யுகத்தில் ஓர் அட்சய திருதியை தினத்தன்றுதான் பிரம்மா உலகைப் படைத்தார் என்கிறது பிரம்மபுராணம். செல்வத்துக்கு அதிபதியான குபேரன் சங்கநிதி - பதுமநிதி எனும் ஐஸ்வரியக் கலசங்களைப் பெற்ற நாள் அட்சய திருதியை. திருமகளின் எட்டு அவதாரங்களுள் ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் தான்யலட்சுமி தோன்றியது இந்தத் திருநாளில்தான் என்கிறது புராணம்.

வனவாசத்தின்போது தவம் மேற்கொண்ட தர்மருக்கு திருக்காட்சி தந்த சூரிய பகவான் அன்ன வளம் குன்றாத பெருகிக் கொண்டே இருக்கிற அட்சயப் பாத்திரத்தை அவருக்கு அளித்தார்.

அதுவும் இப்படியொரு அட்சய திருதியை நாளில்தான் இந்தப் புண்ணிய நாளில்தான் பரசுராம அவதாரம் நிகழ்ந்தது என்கிறது புராணம். இதைத்தான் ஸ்ரீபரசுராம ஜயந்தி என்று கேரளாவில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அன்னபூரணியான அம்பிகையிடம்,

பிட்சாடனர் திருக்கோலத்தில் வந்த சிவபெருமான் பிட்சை பெற்ற திருநாளும் இதுதான். இப்படி ஈஸ்வரனுக்கே அமுதளித்த அன்னபூரணிக்கும் மகத்தான அட்சய சக்திகள் கூடின என்கிறது சிவபுராணம்.

இவ்வாறு பல உற்பத்திகளும் சிறப்புகளும் இந்த நன்நாளிலே தொடங்கியது. நாம் சில தவறானவற்றை செய்து கொண்டிருக்கின்றோம். கொடுப்பதால் பெருகுமே தவிர வாங்குவதால் பெருகாது இதுதான் அட்சய திருதியை நாளின் சிறப்பு தங்கம் வாங்குங்கள் என்று சாஸ்திரங்களிலோ அல்லது ஆகமங்களிலோ எதிலும் குறிப்பிடவே இல்லை. மாறாக, ஒரு சிறுமணி அளவேனும் தங்கத்தை தானம் வழங்குவது மிகுந்த புண்ணியம் என்கிறது தர்மசாஸ்திரம்.

விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் அது சேரும் என்பதால் விலையற்ற பொருளேனும் கொடுப்பதால் சேரும் என்பதே உண்மை. அதேபோல் புண்ணியம் நிறைந்த நன்னாளில், முடிந்த வரை தானம் செய்யுங்கள். ஆடை வழங்குங்கள். இயலாதவர்களுக்கு போர்வை வழங்குங்கள்.

அன்னதானம் செய்யுங்கள். ஒரு ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். உங்கள் வீட்டுக்கு ஐஸ்வர்ய லட்சுமி வருவாள் ஐஸ்வர்யம் உங்கள் இல்லத்தில் என்றைக்கும் குடியிருக்கும்.

முக்கியமாக, உப்பு, மஞ்சள், சர்க்கரை என வெள்ளை நிற பொருட்கள் வாங்குவதும் தானமாகக் கொடுப்பதும் தரித்திரங்களை எல்லாம் போக்கும் என்கிறார்கள் முன்னைய காலங்களில் பசுக்கள் தானமாக கொடுத்தார்கள் அதனால் பட்டிகள் பெருகியது.

தானத்துக்கும் தர்மச் செயலுக்கும் உரிய நாளாகவே இந்நாள் அமைகிறது. எனவே செய்வதை அறிந்து செய்தால் வாழ்வு சிறக்கும். இதுதான் இந்நாளின் சிறப்பு என அவ தெரிவிக்கப்பட்டுள்ளது.

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US