இஸ்ரேலியருக்கு சொந்தமான இரசாயன அமில கப்பல் கடத்தல்
இஸ்ரேலியருக்கு சொந்தமான இரசாயன கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.
சென்ட்ரல் பார்க் என்ற பெயர் கொண்ட கப்பல், சர்வதேச கப்பல் மேலாண்மை நிறுவனமான சோடியாக் மரைடைம் மூலம் நிர்வகிக்கப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல் சுமார் 20 ஆயிரம் டன் பாஸ்போரிக் அமிலத்தை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.
கப்பலை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை
இந்நிலையில் ஏடன் வளைகுடா வழியாகச் சென்ற இந்தக் கப்பல் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்தியவர்களால் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தக் கப்பலில் கொண்டு செல்லப்பட்ட பாஸ்போரிக் அமிலம் உரங்கள் தயாரிக்கப் பயன்படும் என்றும், கப்பலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் இருந்தாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த கப்பலை மீட்க இஸ்ரேல் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |