தேர்தலில் செலவிடக்கூடிய உச்ச வரம்புத்தொகை தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்யக்கூடிய உச்ச வரம்புத் தொகை குறித்து அறிவிக்கப்பட உள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் பூர்த்தியானதன் பின்னர் இந்த உச்ச வரம்புத்தொகை அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுத்தாக்கல்
வேட்பு மனுத்தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களுடனும் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளர்களுடன் கலந்தாலோசனை செய்து தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய உச்சவரம்புத் தொகை நிர்ணயிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
தேர்தல் செலவுகள் சட்டத்தின் பிரகாரம் நிர்ணயம் செய்யப்படும் உச்ச வரம்புத் தொகையை விடவும் கூடுதல் அளவில் செலவு செய்ய எந்தவொரு வேட்பாளருக்கும் அனுமதி வழங்கப்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் செலவிடக்கூடிய உச்ச வரம்புத்தொகை
தேர்தலில் செலவிடக்கூடிய உச்ச வரம்புத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டதன் பின்னர் அதனை விடவும் கூடுதல் தொகையை வேட்பாளர் ஒருவர் செலவிட்டால் அது குறித்து பொதுமக்களோ அல்லது கண்காணிப்பு அமைப்புக்களோ தேர்தல் ஆணைக்குழவிடம் முறைப்பாடு செய்ய முடியும் என கூறியுள்ளார்.
பணவீக்கம், நுகர்வோர் விலைச்சுட்டி போன்ற காரணிகளை கருத்திற்கொண்டு தேர்தலில் செலவிடக்கூடிய தொகை குறித்து நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam