பரீட்சை திணைக்களத்தின் உயர் பதவி நியமனம் தொடர்பில் சிக்கல் நிலை
பரீட்சை திணைக்களத்தின் உயர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிப்பது தொடர்பில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் (தொழில்நுட்ப அதிகாரி) பதவி தொடர்பில் இந்த சிக்கல் நிலை எழுந்துள்ளது.
இதுவரை பணிபுரிந்த அதிகாரி ஓய்வு பெற்றதை அடுத்து நியமிக்கப்பட்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரிக்கு அந்த துறை ஊழியர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
தொழில்நுட்ப சேவை அதிகாரி
எனவே குறித்த அதிகாரி திணைக்களத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவில் கடமையாற்ற வேண்டும் என கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, கணினிப் பிரிவிற்கு கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவரை நியமிப்பதன் மூலம் அதன் உள்ளக செயற்பாடுகளை சீர்குலைத்து வெளியீட்டில் மேலும் தாமதம் ஏற்படும் என அரசாங்க தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிபுணர்கள் சங்கம் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவிற்கு கடிதம் எழுதியுள்ளது.
எனவே இத்துறைக்கு தொழில்நுட்ப சேவை அதிகாரிகளை தவிர ஏனைய அதிகாரிகள் தேவையில்லை என்றும் கணினி துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |