வவுனியாவில் மூன்று கிராமசேவகர் பிரிவுகளில் அதிகளவு கோவிட் தொற்றாளர்கள்
வவுனியாவில் மூன்று கிராமசேவகர் பிரிவுகள், அதிகமான கோவிட் தொற்றாளர்கள் இனம்காணப்படும் பகுதியாக இருப்பதாகச் சுகாதார தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியா நகரம், நொச்சிமோட்டை, தோணிக்கல் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு நாளும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அதிகரித்து வருகின்ற தொற்றாளர்களை கட்டுப்படுத்துவதற்குச் சுகாதார தரப்பினரால் பல்வேறு முன் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அந்தவகையில் சுகாதார தரப்பினருக்கு உதவியாகக் கிராம மட்டத்திலிருந்து தற்காலிக சுகாதார பணி உதவியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு இணைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிராம மட்ட அமைப்புக்களின் உதவிகளைப் பெற்று அதன் மூலம் தொற்று ஏற்பட்டவர்களையும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களையும் கண்காணிக்கும் செயற்பாட்டினையும் முன்னெடுக்கவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



