குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு ஒன்றின் உயர் பதவி!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் அதிகாரியொருவர் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு ஒன்றின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய ஜனாதிபதி செயலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மற்றொரு அமைச்சின் ஊழியர்கள், உயர் அதிகாரிக்கு எதிரான கடுமையான ஊழல் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளின் பட்டியலை விவரித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கடிதம் எழுதியதை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாரிய மோசடி
ஊழியர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில், அரிசி இறக்குமதி தொடர்பான பாரிய மோசடித் திட்டத்தில் அதிகாரியின் பங்கு தொடர்பான குற்றச்சாட்டும் அடங்குகிறது.
இந்தக் கூற்றுக்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிய ஜனாதிபதி அலுவலகம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விடயம் உண்மையாக இருந்தால் நியமனம்
வழங்கப்படுவதற்கு முன்னர் அங்குள்ள அதிகாரிகளின் கவனத்திற்கு இது எவ்வாறு
வரவில்லை என்று ஜனாதிபதி அலுவலகம் கேள்வியையும் தொடுத்துள்ளது.




