ஜேர்மன் நாட்டு உயர்ஸ்தானிகருடன் உயர்மட்ட கலந்துரையாடல் - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றத் திட்டம்
இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு உயர்ஸ்தானிகருக்கும், திருகோணமலை மாநகர சபை முதல்வர் க. செல்வராசா மற்றும் பிரதிமுதல்வர் நெ. மு. மஹ்சூம் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று(02.06.2026) குச்சவெளியில் உள்ள “ஜங்கில் பீச்” விடுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மாநகர சபை அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
இதன்படி, மாநகர சபை அபிவிருத்தி திட்டங்கள் - திருகோணமலை மாநகரப் பகுதியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

சவால்களும் பிரச்சினைகளும் - மாநகர சபை தற்போது எதிர்கொண்டு வரும் நிர்வாக ரீதியான சவால்கள், நிதிப் பற்றாக்குறைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
அத்துடன், சர்வதேச ஒத்துழைப்பு - திருகோணமலையின் கட்டமைப்பு வளர்ச்சிக்காக ஜேர்மன் அரசாங்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியமான உதவிகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பானது, திருகோணமலை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள அமைந்திருந்ததாக மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri