வவுனியாவில் ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு கூட்டம் வவுனியாவில் இன்று(10) இடம்பெற்று வருகின்றது.
ரெலோ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் குறித்த கூட்டம் நடைபெற்று வருகின்றது.
உயர்மட்ட கலந்துரையாடல்
ரெலோவின், சமகால அரசியல் நிலவரங்கள், உள்ளூராட்சி தேர்தலில் முடிவடைந்துள்ள நிலையில் சபைகளில் ஆட்சியமைப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக் கலந்துரையாடலில் பேசப்பட இருப்பதாக அறிய முடிகின்றது.
கலந்துரையாடலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், கோவிந்தன்கருணாகரன், கட்சியின் முக்கியஸ்தர்களான ஹென்றிமகேந்திரன், பிரசன்னா இந்திரகுமார், சுரேன்குருசாமி, உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.







ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
