ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் உயர்மட்ட கலந்துரையாடல்!
ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் இன்று உயர் மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் உள்ள கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை முன்னெடுக்கப்போவதில்லை என்று என்று இலங்கை முடிவு செய்தநாட்களில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இரண்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களின் மூத்த அதிகாரப்பூர்வ மட்டத்தில் இன்று இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இதன்போது இரு தரப்பினரும் தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் கொள்கை முன்னுரிமைகள் குறித்து விவாதித்தனர்
மேலும் இலங்கையின் பொதுவான குறிக்கோள்களைப் பின்பற்றுவதில் ஒன்றிணைந்து செயல்பட தீர்மானித்தனர் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.




