சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட உத்தியோகபூர்வ குழுவொன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி புதன்கிழமை முதல் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குறித்த குழு வருகை தரவுள்ளது.
அநுரகுமார திஸாநாயக்க
நாட்டின் பொருளாதாரம் மற்றும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார வேலைத்திட்டம் குறித்தும் அங்கு கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
