பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாத சிறுவர்களின் பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இதற்கமைவாக இம்மாதம் முழுவதும் கட்டணம் செலுத்தாமல், உரிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து பிரதேச செயலக மட்டத்தில் கடமையாற்றும் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்கள் குறித்த சேவையை முன்னெடுக்கவுள்ளனர்.
தேவையான உதவி
இவ்வாறு சான்றிதழ் இல்லாத சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை அவர்கள் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கணிசமான எண்ணிக்கையிலான சிறுவர்கள் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாமல் இருப்பதாக இதன்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan