கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழா குறித்து வெளியான தகவல்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவானது மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாணம் அவர்களது ஒருங்கிணைப்பின் கீழ் ஆயர் இல்லம் யாழ்ப்பாணம், இலங்கை கடற்படை, இந்திய துணைத் தூதரகம் , பிரதேச செயலகம் நெடுந்தீவு, பிரதேச சபை நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) நடைபெறவுள்ளதாக அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
அத்துடன், பின்வரும் பயண ஏற்பாடுகள் விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
அதன்படி,நாளை காலை 4.00 மணி தொடக்கம் பி.ப 01.00 மணி வரை அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும்.
படகுச்சேவை
கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து நாளை காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் கச்சதீவிற்கான கடற்போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என்பதனால் யாத்திரிகர்கள் குறித்த நேரத்திற்கு முன்னர் தமது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 ஆகும்.
முற்றாக தடை
கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்களுக்கு நாளை மறுதினம் அன்று காலை உணவு மட்டும் வழங்கப்படும்.

ஏனைய வேளைகளுக்கான உணவினை தாங்களே எடுத்துவர வேண்டும் என்பதுடன் அப்பிரதேசத்தில் உணவினை சமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri