மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு கடும் கிராக்கி!
நாட்டில் எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ளதால், ஹட்டன் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மண்ணெண்ணெய் அடுப்புகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நாட்டில் எரிவாயு அடுப்பு வெடிப்பதால், பலர் விறகு, மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு மாறியுள்ளனர். மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு அதிகளவில் மக்கள் மாறி வருகின்றனர்.
இதன்படி 2200 ரூபா முதல் 3500 ரூபா வரை விற்கப்பட்ட மண்ணெண்ணெய் அடுப்பு தற்போது 7000 ரூபா முதல் 9000 ரூபா வரை அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து மண்ணெண்ணெய் அடுப்பு விற்பனை செய்யும் பல வியாபாரிகளிடம் கேட்டபோது,
எரிவாயு அடுப்பு வெடித்ததாலும், மண்ணெண்ணெய் அடுப்புகளின் விலையை விற்பனையாளர்கள் உயர்த்தியதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.