பகிடிவதை தொடர்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பகிடிவதை தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு பகிடிவதை காரணமாக உடல் மற்றும் மூளைப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள அப்போதைய முதலாம் வருட மாணவரான பசிந்து ஹிரூஷன் சில்வா எனும் மாணவர், தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் பெற்றுத் தருமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்னாண்டோ, சோபித ராஜகருணா ஆகியோர் கொண்ட அமர்வினால் வழங்கப்பட்டது.
கடுமையான நடைமுறை
அதன்போது பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டல்களை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தேவையான ஒத்தாசைகளை வழங்குமாறு உயர்கல்வி அமைச்சுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
