முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம்
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் விதவைகளுக்கான சிறப்புரிமை சலுகைகளை நீக்கும் சட்டமூலம் தொடர்பில் (10) நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் விதவைகளுக்கான சிறப்புரிமை சலுகைகளை நீக்கும் உத்தேச சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உயர்நீதிமன்ற அங்கீகாரம்
குறித்த தீர்ப்பை பற்றிய அறிவித்தலை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, செவ்வாய் நாடாளுமன்ற அமர்வில் வெளியிட்டிருந்தார்.

உயர்நீதிமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் குறித்த சட்டமூலத்தை துரிதமாக நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அதன்பிரகாரம் (10) குறித்த சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவு நாடொன்றை மொத்தமாக தாக்கவிருக்கும் புயல்: ஹொட்டல் ஒன்றில் சிக்கிய 200 பிரித்தானியர்கள் News Lankasri
குணசேகரனிடம் எகிறி பேசிய சக்தி, திடீரென நடந்த துப்பாக்கி சூடு... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam