பொலிஸ் மா அதிபருக்கு எதிரான மனுக்கள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி பரிசீலிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவை இன்று (20.03.2024) உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயர் நீதிமன்ற அமர்வு
மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வில் பொலிஸ் மா அதிபருக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளது.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தேசபந்து தென்னகோனுக்கு எதிராக பல பரிந்துரைகளை வழங்கியுள்ளதுடன், ஒருவரைக் கைது செய்து கொடூரமாக சித்திரவதை செய்தமைக்காக அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டில் அவரை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை முறையான அனுமதியைப் பெறவில்லை என்பது தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |