கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற சரத் பொன்சேகா
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா இன்று (19) கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் இராணுவத்தளபதி தயா ரட்நாயக்கவை கட்சியில் இணைத்தமைக்காகவும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை விமர்ச்சித்தமைக்காகவும் சரத் பொன்சேகாவை கட்சியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற தடை உத்தரவு
எனினும் பொன்சேகா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்ற நிலையிலேயே இன்று கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த கூட்டத்தில் பீல்ட் மார்ச்ல் பொன்சேகா எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை எனவும் மாறாக மற்றவர்கள் சொல்வதை மட்டும் செவிமடுத்தார் என்றும் கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
