பொலிஸ் மா அதிபருக்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றுவதையும் செயற்படுவதையும் தடுக்குமாறு கோரி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஹிருணிகா தனது மனுவில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அரசியலமைப்பு பேரவையின் தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
2022, மே 09ஆம் திகதியன்று காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கில் தென்னகோனை சந்தேக நபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர் கோரியதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனுவில் சுட்டிக்காட்டு
அத்துடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரின்; அடிப்படை உரிமைகளை மீறியமைக்காக தென்னக்கோன் இழப்பீடாக 500,000 ரூபாயை செலுத்தவேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு ஒன்று வழங்கப்பட்டதையும் மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தகுந்த வேட்பாளரை தேர்ந்தெடுத்து நியமிப்பதில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்காதது மக்களின் நலன்களுக்கு முரணானது.
அத்துடன் மக்களின் அடிப்படை உரிமைகளை மதித்து, பாதுகாப்பது மற்றும் முன்னேற்றுவது ஆகிய அனைத்து மாநில அமைப்புகளின் கடமைக்கும் தென்னக்கோனின் நியமனம் முரணானது என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.
இந்த நியமனம் சட்டத்தின் ஆட்சியின் மீதான நேரடித் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்றும் மனுதாரரான ஹிருணிகா பிரேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |