றோயல் பார்க் கொலை தொடர்பான அடிப்படை மனுவை விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன றோயல் பார்க் கொலை தொடர்பான குற்றவாளியான சமந்த ஜூட் அந்தனி ஜயமஹாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யபபட்ட அடிப்படை மனுவை விசாரணை செய்ய இன்று உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதன்படி மனு எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி கூடுதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதேவேளை, குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதற்கான அங்கீகாரத்தை வழங்கும் ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த ஜனாதிபதி; மன்னிப்பை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி பெண்கள் மற்றும்
ஊடகக் கூட்டு அமைப்பு, தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதே இந்த உத்தரவுகள்
பிறப்பிக்கப்பட்டுள்ளன.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
