துறைமுகநகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றின் அறிவிப்பு
கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தின் சில சரத்துக்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு குறித்து உயர் நீதிமன்றம் அதன் சட்ட விளக்கத்தை நாடாளுமன்றிற்கு அறிவித்துள்ளது.
இந்த சட்ட விளக்கத்தை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நாடாளுமன்றில் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.
சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையில் அமையப் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சரத்துக்களை அனுமதிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவை என்பதுடன் சில சரத்துக்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் உயர் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் நாளையும், நாளை மறுதினமும் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
