யாழ். போதனா வைத்தியசாலைக்கு இதய அதிர்வு கண்காணிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு
புதிய இணைப்பு
கனடாவிலுள்ள (Canada) மக்களை இலங்கை தமிழ் மக்களுக்கு உதவி புரிய நான் ஊக்குவிப்பேன் என கனேடிய உயர்தானிகர் எரிக் வாஸ் (Eric Walsh) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக, 4 கோடி மதிப்புள்ள இதய அதிர்வு கண்காணிப்பு இயந்திரத்தினை வழங்கி வைக்கும் நிகழ்வில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "தமிழ் மக்களின் நலனுக்காக செந்தில் குமரன் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
கனடா நாட்டில் இசை நிகழ்வுகளை நடத்தி அதனூடாக சேர்க்கப்பட்ட நிதியினை கொண்டே இந்த இயந்திரமானது அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்டு வழங்கப்பட்டதாக செந்தில் குமரன் கூறியமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
அதேவேளை, கனடாவில் உள்ள மக்களை இங்குள்ள தமிழ் மக்களுக்கு நிதியுதவி புரிவதற்கு தொடர்ந்து நான் ஊக்குவிப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இலங்கை மக்களின் நலன் மீது கனேடிய புலம்பெயர் தமிழர்கள் அதிகம் கவனம் செலுத்துவதாக கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில்குமரன் (Senthil Kumaran) தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு டயாலிசிஸ் இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், " 2008ஆம் ஆண்டு தொடக்கம் கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தை ஆரம்பித்ததிலிருந்து கனேடிய தமிழ் மக்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
மேலும், இலங்கை மக்களின் நலன் மீது கனேடிய புலம்பெயர் தமிழர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.
அது மாத்திரமன்றி, சுமார் 118 மக்களின் உயிர் காப்பிற்கு அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்” என கூறியுள்ளார்.
New Update - 09.06.2024
மூன்றாம் இணைப்பு
(07.06.2024)
யாழ்.போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக இதய அதிர்வு கண்காணிப்பு இயந்திரம் (Eco Machines) ஒன்று இலங்கைக்கான கனேடிய உயர்தானிகரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று (07.06.2024) யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கனேடிய நிறுவனம்
இதன்போது, கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த இயந்திரம் வைத்தியசாலை பணிப்பாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வாஸ் (Eric Walsh) கலந்து கொண்டு வைத்திய உதவிப் பொருட்களை கையளித்திருந்தார்.
மேலதிக தகவல் - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |