யாழில் இலங்கைக்கான இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல் (Photos)
யாழ்ப்பாணம் – மருதடி வீதியில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணியளவில் கண்ணாடி போத்தல்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று(10) காலை யாழ். இந்திய துணைத் தூதுவரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்ததாவது,
வாகனம் ஒன்றில் பயணித்த ஒருவர் மது போதையில் கண்ணாடி க்ளாஸ் ஒன்றை தவறுதலாக வீசியுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் பயணித்த வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
மேலதிக தகவல்: தீபன்









16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
