மறைக்கப்பட்ட புகைப்படங்கள்! சஞ்சீவ கொலை ஆய்வில் முக்கிய தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் கையடக்க தொலைபேசி தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் நீக்கப்பட்ட புகைப்படங்களை விசாரணை அதிகாரிகள் குறித்த கையடக்க தொலைபேசியில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.
இது தவிர, மற்றொரு பிஸ்டல் ஆயுதத்தின் புகைப்படங்களையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரியின் கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்தபோது, தற்போது மாயமாகியுள்ள பெண் சந்தேக நபருக்கு சொந்தமானதாக அடையாளம் காணப்பட்ட தொலைபேசி எண்கள் இருப்பதையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
துப்பாக்கி சூடு
இந்நிலையில் துப்பாக்கி சூட்டை நடத்திய சந்தேக நபர் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், நீர்கொழும்பு, கட்டுவெல்லகமபரவைச் சேர்ந்த பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி வீரசிங்க என்பவர் இந்தக் குற்றத்திற்காக துப்பாக்கியைக் கொண்டு வந்ததாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், காணாமல் போன குறித்த பெண் சந்தேக நபரைக் கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |