இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ்வின் உயரடுக்கு தளபதி கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்
லெபனான் - பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ்வின் உயர்மட்ட தளபதி இப்ராஹிம் அகில் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிஸ்புல்லாவின் உயரடுக்கு கூட்டம் ஒன்றை, அவர் நடத்திக்கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வான் வழித்தாக்குதலின் போது, ஹிஸ்புல்லாஹ் இராணுவ அதிகாரியான இப்ராஹிம் அகில் மீது இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்ததை இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதல்
லெபனான் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.

எனினும், அதில் அகிலும் உள்ளடங்குகிறாரா என்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை அகில், ஹிஸ்பொல்லாவின் உயரடுக்கு ரத்வான் படை மற்றும் ஜிஹாத் சபையின்; தலைவராக பணியாற்றியுள்ளார்.
1983 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற குண்டு வீச்சு சம்பவத்துக்காக அமெரிக்கா அவர் மீது குற்றம் சுமத்தியிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 15 மணி நேரம் முன்
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan