இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவரின் மருமகன் பலி! தொடர்ந்து தீவிரமடையும் தாக்குதல்
லெபனானின் பெய்ரூட் நகரில் நேற்றிரவு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிமின் தனி செயலாளர் மற்றும் மருமகனான அலி யூசுப் ஹர்ஷி என்பவர் பலியாகியுள்ளார்.
ஹிஸ்புல்லா தலைவர் அலுவலகத்தின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கிய பங்காற்றியவர். அவர், காசிமின் நெருங்கிய உதவியாளர் மற்றும் தனி ஆலோசகராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
தொடர்ந்து தீவிரமடையும் தாக்குதல்
பெய்ரூட் மற்றும் அதனை சுற்றியுள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பை இலக்காக கொண்டு தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்திய சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தம்
ட்ரம்ப் அரசின் முடிவை இஸ்ரேல் அரசு வரவேற்றுள்ளதுடன், இந்த 2 வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில், லெபனான் நாடு இடம் பெறாது என்றும் கூறியுள்ளது.

இதனால், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.