ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுட்டுக்கொலை
ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் மூத்த தளபதி ஷேக் முகமது அலி ஹமாதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவமானது கிழக்கு லெபனானில் (Lebanon) - பெக்கா பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள அவரின் வீட்டின் முன் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஷேக் ஹமாதி மீது ஆறு குண்டுகள் பாய்ந்ததாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுட்டுக்கொலை
இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், குறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷேக் முகமது அலி ஹமாதி, அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார்.
இவர் கடந்த 1985ஆம் ஆண்டு 153 பயணிகளுடன் உரோம் நகரில் இருந்து ஏதென்ஸ் நோக்கிச் சென்ற விமானத்தை கடத்தி, அதில் ஒரு அமெரிக்கரை கொலை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகின்றார்.
இந்நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |