தமிழர் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் வார நிகழ்வுகள் (Photos)
வடமராட்சி - நெல்லியடி மாலிசந்தி பகுதியில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த மண்டபத்தில் மாவீரர் வார இறுதி நாளான நவம்பர் 27 வரை அஞ்சலி
நிகழ்வுகள் இடம் பெறவுள்தாக தெரிவிக்கப்படுகிறது.
மாவீரர்களின் பெற்றோர் கெளரவிப்பு
மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஈழ போராட்டத்தில் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் வகையில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கௌரவப் படுத்தும் நிகழ்வு இன்றைய தினம் (23) மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கும் விதமாக குறித்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர் பெற்றோர்கள், முன்னால் போராளிகள், அருட்தந்தையர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-ஆஷிக்
தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாதை
விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாதை கிளிநொச்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பதாதைகள் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக "தமிழ் மண்ணின் மெய்யான தலைவர்கள்" என தலைப்பிட்டு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி-எரிமலை
கொக்குத்தொடுவாயில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு
கொக்குத்தொடுவாயில் உள்ள மாவீரர் பெற்றோர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் இன்று (23) கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மாவீரர்களின் வரலாற்றையும் மாவீரர்களின் பெற்றோர்களின்கௌரவத்தினையும் மதிப்பளிக்கும் வகையில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு உலர் உணவுப்பொதிகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி-கீதன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 19 நிமிடங்கள் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
