நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் சஜித் இடையே காரசாரமான வாக்குவாதம் (Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சபையில் வாக்குவாதமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நாடாளுமன்றத்தில் இன்று (23.11.2023) நடைபெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச உரையாற்றும் போது, ஒலிவாங்கி மற்றும் கேமராக்களை நிர்வகிப்பவர்கள் தங்களது கடமைகளை ஒழுங்காக செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
முற்றிய வாக்குவாதம்
மேலும் இவ்வாறான நியாயமற்ற மற்றும் பக்கச்சார்பான செயற்பாடுகளுக்கு உடனடியாக தீர்வை பெற்றுத்தருமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து, எழுந்து நின்ற ஜனாதிபதி, “மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, நான் எதிர்க்கட்சி தலைவருடைய கருத்துடன் உடன்படுகின்றேன். தயவு செய்து கேமராக்களை எப்போதும் அவர் மீதே வைத்திருங்கள். என் மீது அவற்றை வைக்க வேண்டாம்” என்றார்.
இதற்கு பதிலளித்த சஜித், “ஜனாதிபதி அவர்களே, இது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அல்ல. நான் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை. எனது வார்த்தைகளை திரித்து நான் கூறியதை தவறாக சித்தரிக்க வேண்டாம்” என்றார்.
இதன் பின் நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். “கேமராக்கள் எப்போதும் உங்கள் பக்கமே இருக்க வேண்டும்” என ஜனாதிபதி பதிலளித்தார்.
அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் சிக்கல்: தப்பிச் சென்ற ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா - சபையில் வெளியான தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |