இஸ்ரேலிய பிரதமருக்கு அறுவை சிகிச்சை
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு (Benjamin Netanyahu) மேற்கொள்ளப்பட்ட குடலிறக்க அறுவை சிகிச்சையைத் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதனைதொடர்ந்து இன்று பிற்பகல் அவர் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து தனது அன்றாட பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் உரையாடல்
முன்னதாக, ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"
இன்று பிரதமர் நெதன்யாகுவிற்கு வெற்றிகரமாக குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்டாகவும், பின்னர், நெதன்யாகு சுயநினைவுடன் இருப்பதாகவும், குடும்பத்துடன் உரையாடி வருவதாகவும், அவர் குணமடைந்து வருகிறார்" என குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan