வெளிநாட்டு உதவிகள் பெறுதில் அரசு எதிர்கொள்ளப்போகும் சவால்கள்:நாமல் எம்.பியின் எதிர்வு கூறல்...
கணக்காய்வாளர் நாயகம் பதவியுடனான விளையாட்டை அரசாங்கம் நிறுத்தவில்லை என்றால், இலங்கைக்கு வெளிநாட்டு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து கடன்கள் மற்றும் உதவிகளை பெற்றுக் கொள்வதில் பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
எந்தவொரு சர்வதேச அமைப்பும் முறையான கண்காய்வின் அடிப்படையிலேயே தனது உதவியை வழங்குகிறது.
ஏற்பட்டுள்ள சிக்கல்கள்
அத்தகைய கண்காய்வை நடத்துவதற்கு கணக்காய்வாளர் நாயகம் இல்லாத ஒரு நாட்டிற்கு உதவி வழங்க எந்த நாடும் அல்லது அமைப்பும் முன்வராது என்பது பாரிய ஆபத்து என்பதை அரசாங்கம் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.
கணக்காய்வாளர் நாயகத்திற்கான வெற்றிடம் எட்டு மாதங்களாக நிரப்பப்படவில்லை. கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு நண்பர்களை நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சியை அரசியலமைப்புச் சபை முறியடித்ததால், சில அமைச்சர்கள் அரசியலமைப்புச் சபையை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான நபரை நியமிக்காததற்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழலை மறைப்பதற்காகும் என்று குறிப்பிட்டுள்ளார்.