பல இலட்சம் பெறுமதியான களைக்கொல்லி நாசினி திரவ போத்தல்களுடன் ஒருவர் கைது (Photos)
27 இலட்சம் ரூபா பெருமதியான களைக்கொல்லி நாசினி திரவ போத்தல்களுடன் ஒருவர் நுரைச்சோலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக களைக்கொல்லி நாசினி திரவ போத்தல்களை நேற்று இரவு கடத்தி நுரைச்சோலை இலந்தையடி கடற்கரையோரப்பகுதியில் வைத்து காரொன்றிற்கு ஏற்றுவதற்கு முற்பட்டவேளை பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் சுற்றிவளைப்பு
இவ்வாறு களைக்கொல்லி நாசினி திரவ போத்தல்களை சட்டவிரோதமாக இலந்தையடி கடற்கரைப்பகுதியில் வைத்து சொகுசு காரொன்றுக்கு ஏற்றுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடத்துவதற்கு பயன்படுத்திய சொகுசு காரொன்றையும் களைக்கொல்லி நாசினி திரவ போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
12 உரைகளில் 36 பெட்டிகளடங்கிய 430 களைக்கொல்லி நாசினி போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட களைக்கொல்லி நாசினி திரவ போத்தல்கள் 27 இலட்சம் ரூபா பெருமதியென மதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றம்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட களைக்கொல்லி நாசினி போத்தல்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டுவருவதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




