முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்ப்பு
கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பாக, உளவுத்துறை எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கில், உத்தியோகபூர்வ கடமைகளைப் புறக்கணித்து உயிரிழப்புகளுக்குத் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதனைத்தொடர்ந்து, அதே வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam