இலங்கையில் கோவிட் இறப்புக்களில் திடீர் அதிகரிப்பு : எச்சரிக்கும் சுகாதார அமைச்சு
கோவிட் இறப்புகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சு அதிக அக்கறை கொண்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Dr. Hemantha Herath) தெரிவித்தார்.
இது ஒரு உடனடி ஆபத்தின் முன் எச்சரிக்கையாக இருக்கலாம் என்று அவர் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
நாளாந்த இறப்பு எண்ணிக்கை 18 ல் இருந்து நேற்று திங்கட்கிழமை (22) 31 ஆக அதிகரித்துள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் இதனை தீவிரமாக கவனத்தில் கொள்வது அவசியம் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
தொற்றுநோயியல் பிரிவில் கோவிட் இறப்புகள் ஏன் அதிகரித்து வருகின்றன என்பதை ஆய்வு செய்ய ஒரு தனி குழு ஒன்று செயற்படுகின்றது.
இந்த குழுவின் மூலம் எதிர்காலத்தில் இது தொடர்பான அறிக்கை ஒன்றை எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்..
அதேநேரம் , கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள சூழ்நிலையில் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
