இந்தியாவில் உலங்கு வானூர்தி விபத்து! விசாரணைகளை ஆரம்பிக்கும் பாதுகாப்பு தரப்பு
மோசமான வானிலை காரணமாக கேதார்நாத் பள்ளத்தாக்குக்கு உலங்கு வானூர்தி சேவைகளை திங்கள்கிழமை வரை நிறுத்தி வைக்க உத்தரகண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஒன்றரை மாதங்களில் ஒரே பாதையில் மூன்று அவசர தரையிறக்கங்கள் மற்றும் இரண்டு உலங்கு வானூர்தி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக உத்தரகண்ட் மாநில முதல்வர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உலங்கு வானூர்தி
அதிகாரிகள் உலங்கு வானூர்தி விமானிகள் மற்றும் ஆபரேட்டர்களையும் ஆய்வு செய்வார்கள், மேலும் "உயர்ந்த இமயமலைப் பகுதிகளில் உலங்கு வானூர்திகளை பறக்கவிடுவதில் நீண்ட அனுபவம் உள்ள விமானிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற இந்த உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக காணப்பட்டது.
குறித்த விபத்தில் விமானி உட்பட ஏழு பேரும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து நேற்று (15) காட்டுப் பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
விபத்து
இந்தியாவின் கேதார்நாத் கோயிலில் இருந்து உத்தரகண்டில் உள்ள குப்தகாஷிக்கு பறந்து கொண்டிருந்த உலங்கு வானூர்தி , ஒரு காட்டில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.20 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, விபத்து நடந்தபோது உலங்கு வானூர்தி விமானி உட்பட 7 பேர் இருந்துள்ளனர்.
இந்த விபத்தில் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக உத்தரகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.



