அவசரமாக தரையிறங்கிய ரணிலின் பாதுகாப்பு உலங்கு வானூர்தி : விசாரணைகள் ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வான் பயணத்தின் போது பாதுகாப்பிற்கென சென்ற உலங்குவானூர்தி ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை விமானப்படையின் பெல் 412, (SUH 522) நேற்று (14) அநுராதபுர எப்பாவல பகுதியில் உள்ள நெல் வயல் ஒன்றில் திடீரென தரையிறங்கியது.
எனினும் இதன்போது எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
தொழில்நுட்பக் கோளாறு
இந்தநிலையில், அவசர தரையிறக்கத்திற்கான காரணம் குறித்து விமானப்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் உலங்கு வானூர்தியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இருப்பினும் ஒரு மணி நேரத்தின் பின்னர், உலங்கு வானூர்தி மீண்டும் கொழும்புக்கு புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
