தமிழகத்தில் இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து! - 10 பேர் பலி (VIDEO)
புதிய இணைப்பு....
குன்னுார் ஹெலிகொப்டர் விபத்தில்10 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து! - ஏழு பேர் பலி
இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த ஹெலிகொப்டர் தமிழகத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், ஐவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
இந்நிலையில், குறித்த ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்தது காட்டேரி மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது குறித்த ஹெலிகொப்டரில் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஐவர் மீட்கப்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏனையவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.
உடல்கள் தீயில் கருகியுள்ளதால் உயிரிழந்தவர்கள் யார்? யார்? என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹெலிகொப்டரில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்தும் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 20 மணி நேரம் முன்
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam