சிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக மேலுமொரு நிதி சோசடி விசாரணை...
2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட 'தெயட்ட கிருள' (தேசத்திற்கு மகுடம்) தேசியக் கண்காட்சிகளின் போது சுமார் 700 மில்லியன் ரூபா அரச நிதி மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் திருமதி சிரந்தி ராஜபக்ச முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் 12 அரச அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மோசடியாக பெற்றுக் கொண்ட தொகை
2012ஆம் ஆண்டு அநுராதபுரம் மாயாகடுவவிலும் 2013ஆம் ஆண்டு அம்பாறை ஹார்டி கல்லூரியிலும் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சிகளின் போது குறிப்பிட்ட அரச அதிகாரிகள் குழு தமக்கு நெருக்கமான நிறுவனங்களுடன் இணைந்து இவ்வாறு அரச நிதியை மோசடியான முறையில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இலஞ்ச -ஊழல் ஆணைக்குழுவில் இலஞ்ச ஊழலுக்கு எதிரான சிவில் அமைப்பு செய்த முறைப்பாட்டிற்கு இணங்கவே ஆணைக்குழு இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், • முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய • திருமதி சிரந்தி ராஜபக்ச • ஜகத் பெர்னாண்டோ (அமைச்சரின் இணைப்புச் செயலாளர்) • சிறிசேன அமரசேகர (முன்னாள் பிரதமரின் செயலாளர்)
• உதய செனவிரத்ன (முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்)• பி. ஏ. திலகரத்ன (முன்னாள் பெளதீகத் திட்டமிடல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்) • எச். எம். குணசேகர (தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் முன்னாள் செயலாளர்)

• பி. பி. அபேகோன் (முன்னாள் பொது நிர்வாகச் செயலாளர்) • மஹிந்த செனவிரத்ன (அநுராதபுரம் மாவட்டச் செயலாளர்) • எஸ். எம். பி. யூ. சேனாரத்ன (தொலைத்தொடர்பு அமைச்சின் முன்னாள் உதவிச் செயலாளர்)
• ஆர். எம். ஆர். பிரேமசிறி (போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் செயலாளர்) • எம். எம். பி. பெர்டினண்டோ (மின்சக்தி மற்றும் எரிசக்தி செயலாளர்) ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழலுக்கு எதிரான சிவில் அமைப்பின் தலைவர் ஜாமுனி கமந்த துஷாரவினால் இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவிற்கு 2026.01.12 அன்று செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 10 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri